மேலே பாம்பு.. கீழே நரி..! மத்திய அரசு, ஆளுநரை தாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Prasanth Karthick

செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (10:48 IST)

இன்று சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியுள்ளார்.

 

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் தமிழக அமைச்சர்கள் அடுத்தடுத்து செயல்படுத்த உள்ள துறை ரீதியான திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டனர். இந்நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஆவணங்களில் ‘காலனி’ என்ற சொல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என கூறியுள்ளார்.

 

ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல்லை அரசு ஆவணங்கள், பொது புழக்கத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

 

தொடர்ந்து பேசிய அவர் “மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்பு சுவர் என ஒருபக்கம் ஒன்றிய அரசு, மறுபக்கம் ஆளுநர், இன்னொரு பக்கம் நிதி என்று எல்லா தடைகளையும் நம்மீது ஏற்படுத்தினாலும் அவற்றை தாண்டி சாதனை படைத்து வருகிறோம்.

 

இது தனிமனிதனின் சாதனை அல்ல. அமைச்சர்கள், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி. சுயமரியாதை, சமூக நீதி, மதசார்பின்மை என அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலம் என்ற நிலையை அடைய உழைக்கிறோம்” என பேசியுள்ளார்

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்