ஜாகிர் உசேன் கொலை வழக்கு: சட்டத்தின் பிடியில் யாரும் தப்ப முடியாது! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Prasanth Karthick

புதன், 19 மார்ச் 2025 (12:34 IST)

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசியுள்ளார்.

 

ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

 

இந்த தீர்மானத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கில் இருவர் சரண் அடைந்துள்ளனர். பிற குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
 

ALSO READ: 15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!
 

ஜாகிர் உசேனுக்கும் தவ்ஹீத் என்பவருக்கும் ஏற்கனவே நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது. தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜாகிர் உசேன் கடந்த 8ம் தேதி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து எதிர்தரப்பை அழைத்து விசாரணை நடந்துள்ளது. இந்த நிலையில்தான் நேற்று கண்டிக்கத்தக்க இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய அனைவரும் பாரபட்சமின்றி நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்