முதலில் காஜல் அகர்வால் ; தற்போது செருப்பு கால் - ஸ்மார்ட் கார்டில் குளறுபடி

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (13:51 IST)
குடும்ப தலைவர் புகைப்படம் இருக்கும் இடத்தில் செருப்பு கால் புகைப்படத்தை அச்சிட்டு ஸ்மார்ட் கார்டு கொடுக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அந்தந்த பகுதிகளில் இருக்கும் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் தங்களுடைய ஸ்மார்ட் கார்டை பெற்று வருகிறார்கள்.
 
ஓமலூரை சேர்ந்த சரோஜா(42) என்பவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், அவரின் புகைப்படத்திற்கு பதில், நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இருந்தது. அந்த புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
 
அதேபோல் சிலருக்கு, வேறு சில நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், மரங்கள், இயற்கை காட்சிகள் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதாக புகார் எழுந்தது.
 
இந்நிலையில், பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள போசிநாயக்கன் அள்ளி என்கிற கிராமத்தில் வசிக்கும் சித்தன் என்பவரின் மனைவிக்கு சமீபத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. அதில், மகேஷின் புகைப்படத்திற்கு பதில் செருப்பு அணிந்த ஒற்றைக்கால் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. 
 
மேலும், அவரின் பெயர் இருக்கும் இடத்தில், மகேஷ் சித்தன் என்பதற்கு பதில் மாமனார் சின்னசாமியின் பெயர் இடம் பெற்றுள்ளது.  இதுகண்டு மகேஷின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
இந்தப் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்