பேருந்து நிலையத்திற்கு முட்டு கொடுக்கும் திட்டம் - வைரல் புகைப்படம்

வியாழன், 14 செப்டம்பர் 2017 (12:14 IST)
சமீபத்தில், கோவை சோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 


 

 
சோமனூர் பேருந்து நிலையம் மோசமாக நிலையில் இருப்பதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அதனை கருத்தில் கொள்ளவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களாக கோவையில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் விரிசல் விட்டிருந்த கட்டிடம்  கடந்த 7ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது.
 
அப்போது அதில் 20க்கும் மேற்பட்டோர்  சிக்கிக் கொண்டனர். மொத்தம் 5 பேர் மரணமடைந்தனர். 
 
இந்நிலையில், கோவை சூலூர் பேருந்து நிலையம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், சில அரசு அதிகாரிகள் ஒரு பெரிய இரும்பு கம்பியால், அந்த கட்டிடத்திற்கு முட்டு கொடுத்துள்ளனர்.
 
இதைப் புகைப்படம் எடுத்த சிலர், பஸ் ஸ்டாண்டுக்கு முட்டு கொடுக்கும் திட்டம் அறிமுகம் என சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்