நான் அந்த ஸ்ரீனிவாஸ் இல்லை ; மன்னிப்பு கேளுங்க : பாடகர் ஸ்ரீனிவாஸ் கண்டனம்

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (13:07 IST)
ஒரு பாலியல் புகாரில் கைதான வேறொருவருக்கு பதில் தன்னுடைய புகைப்படம் பயன்படுத்தப்பட்டதற்கு பாடகர் ஸ்ரீனிவாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
சில நாட்களுக்கு முன்பு, ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு பாடகர் கஜல் ஸ்ரீனிவாஸை  ஒரு பாலியல் வழக்கில் போலீசார் கைது செய்தனர். ஆனால், அவரின் புகைப்படத்திற்கு பதிலாக தமிழ் திரைப்பட பாடகர் ஸ்ரீனிவாஸின் புகைப்படத்தை பதிவிட்டு செய்திகள் வெளியாகின.
 
இதுக்கண்டு கொதிப்படைந்த ஸ்ரீனிவாஸ் “நான் சென்னையை சேர்ந்த ஒரு பாடகர். ஹைதராபாத்தை சேர்ந்த என்னுடைய பெயர் கொண்ட பாடகர் கைது செய்யப்பட்டார். ஆனால், என்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு செய்தி வெளியிட்டுள்ளார்கள். அதற்கான என்னிடம் மன்னிப்பு கேளுங்கள்” என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
இதைத் தொடர்ந்து இந்தியாடைம்ஸ் பத்திரிக்கை அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்