கமல்ஹாசன் மீது காவல் நிலையத்தில் புகார்

வெள்ளி, 5 ஜனவரி 2018 (08:38 IST)
வாக்காளர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக நடிகர் கமலஹாச்ன் மீது உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல வார இதழில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த கமல் ஆர்.கே.நகரில் டிடிவி தினரனின் வெற்றி கொண்டாடப்படுவது அவமானப்பட வேண்டிய விஷயம் என்றும் தினகரனின் வெற்றி ஆகப்பெரிய அவமானம் என்றார். ஆங்கிலேயர் நம்மிடம் ரோட்டையும், ரயில் நிலையத்தையும் விட்டுச்சென்று விலைமதிப்பில்லா கோஹினூர் வைரத்தை திருடிச் சென்றனர்.

அதே போல் ஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து மக்களின் விலைமதிப்பில்லா ஓட்டுகளை சிலர் பறித்து சென்றது வெட்கக்கேடான விஷயம் என்றார். அது திருடனிடம் பிச்சை எடுப்பது போன்றது என்று கடுமையாக விமர்சித்தார். ஒட்டுக்கு பணம் வாங்கிய மக்கள், அவர்களின் தற்காலிக பிரச்சனைகளுக்கு மட்டுமே தீர்வு காண முடியுமே தவிர, பிற்காலத்தில் துயரப்பட வேண்டியிருக்கும் என்றார்.
 
இதுகுறித்து உடுமலைப்பேட்டையில் வழக்கறிஞர் சாதிக்பாஷா என்பவர் கமல் கூறிய கருத்து தமிழக வாக்காளர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதென்றும் வாக்காளர்களை பிச்சைகாரர்கள் போன்று விமர்சித்த கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்