கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான நயனா மோட்டம்மா என்பவரது உதவியாளர் ஆதித்யா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
	 
	சிக்மகளூரு ஆதிசக்தி நகரில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதித்யா, அந்த பெண்ணின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியதோடு மட்டுமல்லாமல், அப்படங்களை அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் அனுப்பி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
	 
	இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் சிக்மகளூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆதித்யாவை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.