ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை.. இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva

வியாழன், 30 அக்டோபர் 2025 (09:36 IST)
இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை இன்று இறக்கத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 349 புள்ளிகள் சரிந்து 84,637 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 113 புள்ளிகள் சரிந்து 25,938 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டிகோ, ஜியோ ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, மாருதி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா மோட்டார், பவர் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன. 
 
நிஃப்டியில் உள்ள மற்ற அனைத்து பங்குகளும் சரிவில்தான் வர்த்தகமாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், எதிர்காலத்தில் பங்குச்சந்தைக்கு நல்ல ஏற்றம் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்