வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள் ?

Siva

வியாழன், 30 அக்டோபர் 2025 (09:43 IST)
மத்திய நேரடி வரிகள் வாரியம் நடப்பு நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
 
வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அக்டோபர் 31 ஆக இருந்த காலக்கெடு, தற்போது டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்யும் காலக்கெடு நவம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நீட்டிப்பின் மூலம், வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்கள் தங்களது நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்கக் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்