இளையராஜா இசையில், விஜயகாந்த் மகன் நடிக்கும் புதிய பட தலைப்பு !

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (12:56 IST)
தமிழ் சினிமாவின் பிரபல   நடிகரும், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் அடுத்த பட தலைப்பு  வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் நடிப்பில்  மதுரை வீரன் என்ற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, இவரது அடுத்த படம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டனர். இந்த நிலையில்,  வால்டர், ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிப்பதாக தகவல் வெளியானது.

இப்படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து, கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் நடிக்கின்றனர்.   இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தை டிரைக்டர்ஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் பூஜை எளிமையான முறையில் தொடங்கிய நிலையில், இன்று விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. இதை விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படத்திற்கு படைத்தலைவன் என்று பெயரிட்டுள்ளனர். முதல்லுக் போஸ்டரில் யானையுடன் சண்முக பாண்டியன் நிற்கும்  மிரட்டலான புகைப்படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில், U. அன்பு அவர்களின் இயக்கத்தில், எனது இளையமகன் சண்முகபாண்டியன் நடிக்கும் "படைத்தலைவன்" புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் #FirstLook poster #சண்முகபாண்டியன் | #படைத்தலைவன் #இசைஞாணி #இளையராஜா #Uஅன்பு pic.twitter.com/CvbA5aTxmc

— Vijayakant (@iVijayakant) August 25, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்