வாடகை தர முடியாமல் விரட்டப்பட்ட பெண்ணுக்கு 3 மாத வாடகை கொடுத்து உதவிய எம்.எல்.ஏ

செவ்வாய், 12 மே 2020 (07:30 IST)
3 மாத வாடகை கொடுத்து உதவிய எம்.எல்.ஏ
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்து வருமானமின்றி உள்ளனர் குறிப்பாக வாடகை வீட்டில் உள்ளவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக வாடகை தர முடியாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு உட்பட கிட்டத்தட்ட அனைத்து மாநில அரசுகளும் வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர்களிடம் வாடகையை கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது என்று அறிவித்து இருந்தது. ஒரு சில மாநிலங்கள் வாடகையை அரசே தருவதாகவும் பொறுப்பேற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் தமிழகத்தில் பல இடங்களில் வாடகையை வீட்டு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தி வசூல் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது குறித்த செய்திகள் வெளியானது. இந்த நிலையில் வாடகை தர முடியாமல் வீட்டு உரிமையாளரால் அவதிக்குள்ளான பெண் ஒருவர் குறித்து செய்தி தொலைக்காட்சி மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் மூன்று மாத வாடகை மற்றும் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுத்து உதவி செய்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்