சிஎம் ஆபிஸில் இருந்து வந்த ரிப்ளை: சீமானுக்கு சக்சஸ்!!

வியாழன், 16 ஏப்ரல் 2020 (14:49 IST)
சீமான் கேரள அரசுக்கு வைத்த கோரிக்கை ஒன்றை அம்மாநில அரசு ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அன்றாட வேலைக்கு செல்லும் மக்கள் பலர் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் வாடகை தரவில்லை என 48 தமிழ் குடும்பங்களை அந்த வீடுகளின் உரிமையாளர்கள் வெளியே துரத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கோரிக்கை விடுத்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் தெரிவித்ததாவது, கேரளாவில் பொருளாதார நெருக்கடி சூழலால் வாடகை அளிக்க இயலாத தமிழ் குடும்பங்களை உரிமையாளர்கள் வெளியேற்றியுள்ள சம்பவம் வருத்தத்தை தருகிறது. இதுகுறித்து தாங்கள் கவனித்து உதவிகள் ஏதாவது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.. 
 
இதற்கு அங்கு இருந்து பதில் வந்துள்ளது அதில், அதிகாரிகளிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தப்பட்டுவிட்டது. இதனை எங்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி என கூறியுள்ளனர். இதற்கு சீமானும் பதில் அளித்துள்ளார். 
 
அதில் அவர், இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம் என பதில் அளித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்