அதிமுக மற்றும் திமுக ஆட்சியில், கோவில்களில் இருந்து வரியாக ரூ.1,153 கோடி எடுக்கப்பட்டதாகவும், குறிப்பாக 2018 ஆம் ஆண்டில் ரூ.327 கோடி, 2019 இல் ரூ.348 கோடி, 2021 இல் ரூ.471.78 கோடி எடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக இந்து கோவில்களில் இருந்து மட்டும் ரூ.656 கோடி வரி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது மாதந்தோறும் ரூ.56 கோடி வரி விதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் பலரிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.