மக்களவை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக தேர்தல் நடைபெறும் சமயத்தில் மதுபானக் கடைகள் மூடப்படுவது வழக்கம்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் வரும் 17, 18 மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் 19ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாக்குஎண்ணும் நாளான ஜூன் நான்காம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.