சக்தி மசாலா, சன்மார் குழுமம், லயன் டேட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிவாரண நிதியுதவி

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (13:12 IST)
சென்னையில் மிக்ஜாம் புயலாலும், அதிகனமழையாலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றது. அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், அரசியல்கட்சிகளும், பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சன்மார் குழும நிறுவனத்தின் தலைவர் விஜய் சங்கர், செயல் துணைத் தலைவர் கார்த்திக் ராஜசேகர் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.

தமிழ்நாடு இந்திய காவல் பணி அலுவலர் சங்கத்தின் தலைவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநருமான அபாஷ் குமார், இ.கா.ப., செயலாளரும், காவல்துறை தலைவருமான (ஆயுதப்படை) திமு.வெ.ஜெய கௌரி, இ.கா.ப., ஆகியோர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு இந்திய காவல் பணி அலுவலர் சங்கத்தின் சார்பில் 9 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

மேலும், சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சாந்தி துரைசாமி,. துரைசாமி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு  ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.…

லயன் டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பொன்னுதுரை, இயக்குநர் திருமதி பி.அபிநயா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் சங்கத்தின் தலைவர் குமார் ஜயந்த், இ.ஆ.ப., துணைத் தலைவர் எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., இணை செயலாளர்கள் திரு.எஸ்.ஏ.ராமன், இ.ஆ.ப., எஸ்.திவ்யதர்ஷினி, இ.ஆ.ப., ஆகியோர்  முதலமைச்சர் .மு.க.ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் சங்க உறுப்பினர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கியுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்