போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்! - உலக அகதிகள் தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

Prasanth K

வெள்ளி, 20 ஜூன் 2025 (11:12 IST)

இன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் அகதிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

உலகம் முழுவதும் அரசியல், போர் காரணங்களால் சொந்த வீட்டை இழந்து, நாட்டை இழந்து, அடையாளங்கள் இல்லாமல் அகதிகளாக சுற்றிவரும் மக்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். பெரும்பாலும் போர்களால் மக்கள் அகதிகளாகும் சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் உலக நாடுகளிடையேயான போரினால் புலம்பெயர்ந்த அகதிகளின் உரிமைகளுக்காக உலக அகதிகள் தினம் இன்று ஜூன் 20ல் கடைபிடிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் அகதிகள் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்!

 

மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்!

 

நமது #DravidianModel-இல் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம்!

 

போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்!” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்