தாம்பரத்தில் தறிகெட்டு ஓடிய பேருந்து: கதிகலங்கவைத்த விபத்தின் வீடியோ!!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (14:13 IST)
தாம்பரத்தில் பிரேக் பிடிக்க அரசுப்பேருந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வீடியோ காட்சி வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரத்திலிருந்து - சோழிங்கநல்லூருக்கு 99ct என்ற மாநகர அரசுப்பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.. இந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றார். அப்போது சிக்னல் ஒன்றில் பேருந்தை நிறுத்த முற்பட்ட விஜயகுமாரால் பேருந்தை நிறுத்த முடியவில்லை. வண்டியில் பிரேக் பிடிக்கவில்லை.
 
இதனால் எதிரே சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது பேருந்து வேகமாக மோதி நின்றது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த வாகன ஓட்டிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. இது சம்மந்தமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்