சீரியல் சூட்டிங்கிற்கு கூடுதல் சலுகை: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
சனி, 30 மே 2020 (09:36 IST)
சின்னத்திரை படப்பிடிப்பில் நாளை முதல் 60 பேர் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சின்னத்திரை மற்றும் பெரிய திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் ஓரளவுக்கு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.
 
ஆனால் அதே நேரத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளில் உள் அரங்குகளில் மட்டுமே நடைபெற வேண்டுமென்றும் படப்பிடிப்பில் கலந்து கொள்வோர் அனைவரும் மாஸ்க் அணிந்து சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் படப்பிடிப்பில் 20 பேர் மட்டுமே அதிகபட்சமாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனைகள் வைக்கப்பட்டது. 
 
20 பேரை வைத்து சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த முடியாது என்று அதிருப்தி எழுந்த நிலையில், சின்னத்திரை படப்பிடிப்பில் நாளை முதல் நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் என 60 பேர் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் ஆட்சியரிடம் ஒருமுறை மட்டும் அனுமதி பெற்றால் போதும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்