12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்த வழிகாட்டுதலை இலவச புத்தகமாக வழங்கியுள்ளது தமிழக அரசு.
+2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் மாணவர்கள் கல்லூரி சேர்க்கையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏராளமான துறை சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ள நிலையில், எதை படிப்பது? எந்த துறையை தேர்வு செய்வது? என்று பல கேள்விகள் மாணவர்களிடையே இருக்கும்
அந்த சந்தேகங்களை போக்கி தெளிவை கொடுக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இணைந்து இலவச புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த புத்தகத்தில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, ஐடிஐ, பாலி டெக்னிக் உள்ளிட்ட பல படிப்புகள் குறித்த விவரங்களும் அடங்கியுள்ளன.
ஒவ்வொரு துறையிலும் வளர்ந்து வரும் அட்வான்ஸ் ரக படிப்புகள், மதிப்புக் கூட்டு படிப்புகள், எந்தெந்த பல்கலைக்கழகங்களில் அந்த படிப்புகள் உள்ளது, அதை படித்தால் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் என பல தகவல்களின் களஞ்சியமாக இந்த புத்தகம் அமைந்துள்ளது.
இதுதவிர போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்கள், காவல்துறை, ரயில்வே, ராணுவம் என பல சேவைகளில் இணைவதற்கான வழிகாட்டுதல், கல்வி உதவித்தொகை பெறுதல், வங்கியில் கல்வி கடன் பெறுதல், இட ஒதுக்கீடு பெறுதல் உள்ளிட்ட கல்விக்கான அனைத்து சாத்தியக் கூறுகளுக்கு வழிகாட்டுகிறது இந்த புத்தகம்.
இந்த புத்தகத்தை இங்கே க்ளிக் செய்து முழுதாக படிக்கலாம், டவுன்லோடும் செய்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு மேல் படிப்பு குறித்து எளிமையாக விளக்கும் அற்புத கையேடாக இது அமைந்துள்ளது.
Edit by Prasanth.K