செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி..! நீதிமன்ற காவல் நாளை வரை நீட்டிப்பு..!!

Senthil Velan
வியாழன், 15 பிப்ரவரி 2024 (17:17 IST)
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இதனிடையே சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
 
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

ALSO READ: மாநிலங்களவைத் தேர்தல்.! எல்.முருகன் உள்பட பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல்.!!
 
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, நாளை வரை நீடித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்