தேர்தல் பத்திரம் ரத்து.! ஜனநாயகத்தை மீட்டெடுத்த தீர்ப்பு.! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.!!

Senthil Velan

வியாழன், 15 பிப்ரவரி 2024 (16:22 IST)
தேர்தல் பத்திரங்கள் ரத்து தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 
 
மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. மேலும் தேர்தல் பத்திர திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அவற்றை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். 
 
தேர்தல் பாத்திரங்களை ரத்து செய்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றமே சரியாக கூறியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.
 
அனைத்துக் கட்சிகளின் ஜனநாயகத்தையும் சம நிலையையும் உச்சநீதிமன்ற தீர்ப்பு மீட்டெடுத்துள்ளது என்றும் தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு தேர்தலில் நேர்மையை உறுதி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிப்படைத் தன்மையுடன் கூடிய தேர்தல் நடைமுறையை உறுதி செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்