அமைச்சர் செந்தில் பாலாஜி மனு: பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பு என அறிவிப்பு..!

Siva
புதன், 7 பிப்ரவரி 2024 (15:51 IST)
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவின் பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு செய்துள்ளது.
 
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் 6 மாதங்களுக்கும் மேலாக சென்னைபுழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இதுதொடர்பாக ஏற்கெனவே பதிவு செய்த 3 பிரதான வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தரப்பு வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கின் விசாரணையை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 15ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்