செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை..!

Siva
திங்கள், 19 பிப்ரவரி 2024 (07:14 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

முதல் கட்டமாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என அமலாக்கத்துறை வாதம் செய்த நிலையில்  அமலாக்க துறை வாதம் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இரண்டு நாட்கள் அமலாக்கத்துறை தரப்பின் வழக்கறிஞர் வாதாடிய போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் அமலாக்கத்துறை வாதம் முடிவடைந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜி தரப்பு வாதம் செய்கிறது. செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பு வாதிடலாம் என்றும், செந்தில் பாலாஜி தரப்பு வாதம் முடிந்ததும் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்