கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (20:35 IST)
கொங்கு மண்டலம் அதிமுகவின் இரும்பு கோட்டை என்றும் அங்கு அதிமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட இருக்கும் நிலையில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை ஈரோட்டில் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகள் தேர்தல் களத்தில் முதல்முறையாக இடைத்தலை சந்திக்கின்றோம் 
 
கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் இரும்பு கோட்டை என்பதால் அதை யாராலும் தகர்க்க முடியாது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் அமைதியாக சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறோம். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்