செங்கோட்டையன் சசிகலாவுக்கு எதிராக திரும்புவாரா?: மனைவியின் ஆதரவு ஓபிஎஸுக்கு!

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (09:39 IST)
அதிமுக இரண்டாக பிளவுபட்டு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என மோதிக்கொண்டு இருக்கிறது. தொண்டர்கள் மற்றும் சில எம்எல்ஏக்கள் ஆதரவு ஓபிஎஸுக்கு உள்ளது. ஆனால் சசிகலாவுக்கு பலத்த எதிர்ப்பு உள்ளது. இதனால் கைவசம் உள்ள எம்எல்ஏக்களின் ஆதரவை பெற அவர்களை சொகுசு விடுதியில் சிறை வைத்துள்ளார்.


 
 
இந்நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ் அணிக்கு சென்றார். இதனையடுத்து அவரை உடனடியாக அவைத்தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கிய சசிகலா செங்கோட்டையனை அவைத்தலைவராக நியமித்துள்ளார்.
 
ஆனால் செங்கோட்டையன் சசிகலா அணியில் இருப்பதை அவரது மனைவி உட்பட குடும்பத்தினர் யாரும் விரும்பவில்லை. சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்த அவரது மனைவி மற்றும் மகன் செங்கோட்டையனை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது சசிகலாவால் தான் உங்களுக்கு முன்னர் பதவி பறிபோச்சு இப்போது மீண்டும் அங்கு சேர்ந்திருப்பது நல்லது இல்லை. ஓபிஎஸ் அணியில் சேர்ந்து விடுங்கள் என கூறியுள்ளனர்.
 
ஆனால் அவர் தனக்கு முக்கியமான பதவி தருவதாக கூறியிருக்கிறார்கள் என நீங்கள் ஊருக்கு கிளம்புங்கள் என அனுப்பி வைத்துள்ளார் என தகவல்கள் வருகின்றன. இதனையடுத்து அவரது மனைவி தனது குடும்பத்தினரிடம் கணவர் செங்கோட்டையன் சசிகலா அணியில் இருப்பது குறித்து புலம்பியுள்ளார்.
 
இந்நிலையில் சில நண்பர்களிடம் பேசிய செங்கோட்டையன் என்ன முடிவு வந்தாலும் தனக்கு இனிமேலும் அரசியலில் புதிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என விரத்தியாக பேசியதாக தகவல்கள் வருகின்றன.
அடுத்த கட்டுரையில்