ஸ்டாலினை ‘அப்பா’ன்னு சொன்னா தப்பா இருக்காது..? - செல்லூர் ராஜூ கிண்டல்!

Prasanth Karthick
ஞாயிறு, 2 மார்ச் 2025 (08:30 IST)

திமுக அரசை விமர்சித்து பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, வடிவேலு வாயை வைத்தாலே ஊத்திக்கும் என விமர்சித்து பேசியுள்ளார்.

 

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் புதூர் பேருந்து நிலையத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுகவை விமர்சித்து பேசினார்.

 

அப்போது அவர் “தற்போது நடத்தப்படும் அதிமுக கூட்டங்களில் அதிகளவில் தாய்மார்கள் கலந்துக் கொள்கின்றனர். பெண்களுக்காக வாழ்நாள் முழுவதும் சபதம் ஏற்று பல திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. பெண் சிசுக் கொலையை தடுத்து நிறுத்தியவர். அதனால் அவரை அன்போடு ‘அம்மா’ என்று அழைக்கின்றனர்.

 

திமுகவினர் 6 முறை தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தியும் சொல்லும்விதமாக ஒரு திட்டமாவது இருக்கிறதா? முதல்வர் மு.க.ஸ்டாலினை யாராவது அப்பா என சொல்வீர்களா? அப்படி சொன்னால் அசிங்கமாக போய்விடும். அம்மா என்றால் எவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருக்கிறது? அப்பா என்றால் தப்பா இருக்காதா?” என பேசியுள்ளார்.

 

மேலும் “அதிமுக ஆட்சியில் போலீஸை கண்டாலே குற்றவாளிகள் நடுங்குவார்கள். ஆனால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள். கலைஞர் ஒரு சிறந்த அரசியல்வாதி. அவரிடம் பாடம் கற்ற ஸ்டாலின் சிறந்த ஆட்சியை கொடுப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் சட்டம் ஒழுங்கு கேவலமான நிலைக்கு சென்றுவிட்டது” என்று விமர்சித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்