என்னது கூட்டுறவு நகைக்கடன் ரத்தா ? – வாய்ப்பே இல்லை என சொன்ன செல்லூர் ராஜூ !

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (08:35 IST)
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம்பெற்றது கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதுதான்.

மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் இடைத்தேர்தலில் அதிமுக போதுமான தொகுதிகளை வெற்றி பெற்று  ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இதனால் திமுக அறிவித்த 5 பவுன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து இன்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் ‘நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் அந்தக் கடன் தொகை மக்களின் டெபாசிட் பணத்திலும், நபார்டு வங்கியின் நிதியினைப் பெற்றும் கடன் வழங்கப்படுகிறது. அரசு நிதியினைக் கொண்டு இது செயல்படுவதில்லை. எனவே கடன் தொகையை செலுத்திதான் ஆக வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்