ஹரியானாவை சேர்ந்த வயதான தம்பதியினர் மோசடிக்கு உள்ளானது குறித்து அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் நடைபெறும் இந்த சம்பவங்களை மாவட்ட அளவில் விசாரிப்பதை விட, சிபிஐ-க்கு மாற்றுவது பயனுள்ளதாக இருக்கும் என்று நீதிபதிகள் கருதினர்.
வழக்குகளை விசாரிக்க சிபிஐயிடம் உள்ள தொழில்நுட்ப மற்றும் மனிதவள வசதிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, சிபிஐ மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்களின் பதிலுக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.