ஸ்டாலினையே வேல் தூக்க வெச்சோம்.. பாத்தீங்களா? – எல்.முருகன் பெருமிதம்!

ஞாயிறு, 24 ஜனவரி 2021 (10:55 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் வேலை ஏந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்கு சென்ற மு.க.ஸ்டாலின் கையில் வேலை ஏந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடவுள் மறுப்பு பேசிய இயக்கத்திலிருந்து வந்தவர் இன்று ஓட்டுக்காக வேலை கையில் எடுப்பதாக மற்ற கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் முன்னதாக தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தி கவனம் ஈர்த்த பாஜக தலைவர் எல்.முருகன் இதுபற்றி கூறுகையில் “ஸ்டாலினையே வேல் தூக்க வைத்ததுதான் பாஜக நடத்திய வேல்யாத்திரையின் வெற்றி” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்