தமிழகத்தில் 2026க்கு முன்பே சட்டமன்ற தேர்தல்? – செல்லூர் ராஜூ ஆரூடம்!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (11:18 IST)
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் 2026க்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வரலாம் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த சில நாட்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

இந்த தீடீர் ரெய்டு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ “திமுகவில் சமீபத்தில் இணைந்த பலர் கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்து பதவி, பணம் சம்பாதித்தவர்களே! எனவே 2026க்கு முன்னதாகவே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழல் எழலாம்” என சூசகமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்