சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் சினிவாசலுவும் நேற்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் புழல் சிறையில் முதல் வகுப்பு கேட்டு சென்னை சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முறைகேடான பணம் பரிவர்த்தனை மற்றும் கருப்பு பணம் பதுக்கல் என்ற பல்வேறு செயல்களில் ஈடுப்பட்ட சேகர் ரெட்டி நேற்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது நண்பர் சினிவாசலுவும் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து 4 நாட்களாக சேகர் ரெட்டி வீட்டில் சோதனை செய்த பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏராளமான ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அவரிடம் சிக்கிய ஆவணங்களை வைத்து நேற்று தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் சினிவாசலு ஆகிய இருவரையும் ஜனவரி 4ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
புழல் சிறையில் முதல் வகுப்பு கேட்டு இருவரும் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட உடனே அவர்கள் இருவரும் ஜாமின் மனு தாக்க செய்தனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.