நாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்!? – சீமானின் சர்ச்சை பேச்சு

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (11:10 IST)
முன்னாள் தமிழர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கூட்டத்தில் பேசிய சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் ”ஆமாம்.. நாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோ. ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது தமிழின மக்களை இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியை தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” என்று பேசியிருக்கிறார்.

சீமான் இப்படி பேசுவது இது முதன்முறையல்ல! ஏற்கனவே முன்னர் நடந்த கூட்டத்திலும் “தமிழ் படிக்க தெரியாதவர்களை பனை மட்டையால் அடித்து தோலை உரித்து உப்பை தடவ வேண்டும்” என பேசினார். இப்போது ஒரு முன்னாள் பிரதமரை பற்றி அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும் இது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி பேசுவது போல உள்ளது என்று பலர் சீமானின் கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்