நிலவில் விக்ரம் லேண்டர் கால்வைத்த இடத்திற்கு பெயர் வைத்த பிரதமர் மோடி..!

சனி, 26 ஆகஸ்ட் 2023 (09:40 IST)
இந்தியாவின் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் இறங்கியது என்பதும் அதிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து தற்போது ரோவர் நிலவை சுற்றி வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
ரோவர் அனுப்பி வரும் புகைப்படங்கள் ஆச்சரியம் அடையும் வகையில் உள்ளது. இந்த நிலையில் நிலவில் விக்ரம்லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்ற பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  
 
மேலும் சந்திராயன் 3  நிலவின் கால் பதித்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்