கமலுக்கு கன்னட மொழியை பற்றி என்ன தெரியும்! - முதல்வர் சித்தராமையா ஆவேசம்!

Prasanth Karthick

புதன், 28 மே 2025 (15:04 IST)

கன்னட மொழிக் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா அதை கண்டித்துள்ளார்.

 

கமல்ஹாசன், சிம்பு நடித்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படம் ஜூன் 5 ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், கன்னட மொழி தமிழில் இருந்து பிரிந்து வளர்ந்தது என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கமல்ஹாசனின் இந்த பேச்சு கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கமலின் பேச்சுக்கு கர்நாடக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் பலர் கமலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்துள்ளதுடன், படத்தையும் தடை செய்ய கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இந்நிலையில் கமல்ஹாசனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா “கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. கமலுக்கு அது தெரியவில்லை” என்று கூறியுள்ளார். 

 

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, கமல்ஹாசன் தனது நாகரிகமற்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்