சென்னையில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தவறான உறவால் கர்ப்பமாகி பிள்ளை பெற்று, அந்த குழந்தையை வீட்டின் கூரையில் வீசி கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சென்னை தண்டையார் பேட்டையில் வசித்து வருகிறார் சரவணன் என்பவர். இவரது வீட்டின் கூரையில் பிறந்த குழந்தை ஒன்று இறந்து அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனையறிந்து அங்கு வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சரவணனின் மகள் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அந்த பகுதியில் உள்ள ரவி என்பவருக்கும் இடையே தவறான உறவு இருந்து வந்துள்ளது.
இதனால் மாணவி திவ்யா கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு கடந்த 28-ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தையை மாணவி வீட்டின் கூரையில் வீசி கொன்றுள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.