டி.என்.பி.எல் டேலன்ட் எக்ஸ்போ போட்டியில் பரணிபார்க் மாநில அளவில் முதலிடம்

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (21:27 IST)
கரூர் அருகே உள்ள வேலாயுதபாளையம், காகிதபுரம் பகுதியில்  மாநில அளவிலான "டேலன்ட் எக்போ போட்டிகள்" ஆகஸ்டு 7, 8 ஆகிய தேதிகளில் டி.என்.பி.ல் வளாகத்தில் நடைபெற்றது.


 


இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பரணிபார்க் பள்ளி மாணவர்கள் N.திவேஷ்கண்ணா, M.சுனில் குமார், K.அஜித் குமார், மாணவிகள் C.B.சுஸ்மிதா, இலக்கியா, A.மதுபாரதி ஆகியோர் குழு நடனப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றனர். 
 
மாணவர்கள் G.சங்கர் பாபு, M.P.தர்ஷன் ஆகியோர் “வார்த்தை விளையாட்டு” போட்டியில் இரண்டாமிடம் பெற்றனர். மாணவன் P.சுபாஷ்  பென்சில் ஆர்டிலும், மாணவி A.பூஜா “கார்டு டிசைனிகிலும்” மூன்றாம் பெற்றள்ளனர். மாணவிகள் V.வர்ஷா, T.நந்தினி ஆகியோர் “கனெக்ஷன்” போட்டியில் நான்காமிடமும் பெற்றனர்.
 
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலாளர் திருமதி.பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார்.பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன், நிர்வாக அலுவலர் M.சுரேஷ், முதல்வர் திருமதி.சுதாதேவி, துணை முதல்வர் R.பிரியா மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
 
சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்
அடுத்த கட்டுரையில்