இதில் பள்ளி மாணவ, மாணவியர் பலரும் பிரதமரை காண பள்ளி சீருடையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மேலும் சில சிறுவர்கள் அனுமார் வேடத்தில், பாஜக துண்டுகளுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தேர்தல் பிரச்சாரங்களில் சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று உள்ள நிலையில், ஒரு கட்சி சார்ந்த நிகழ்வுக்கு பள்ளி மாணவர்களை நிற்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறையிடம் விளக்க கேட்டுள்ள கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார், இதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக உறுதிக் கூறியுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.