இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை! – தமிழக அரசின் ’தமிழ்ப் புதல்வன்’ திட்டம் அறிமுகம்!

Prasanth Karthick

திங்கள், 19 பிப்ரவரி 2024 (11:17 IST)
தமிழ்நாட்டில் மாணவர்களும் மாத உதவித்தொகை பெறும் வகையில் ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்து 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்று 2024ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் மக்களை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. முக்கியமாக பெண்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களும், அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல அரசு பள்ளியில் படித்து மேற்படிப்புக்கு செல்லும் பெண்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்தை தற்போது அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் பெண்களுக்கும் நீடித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு கல்வியை மெறுகேற்ற மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்