மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி சென்னை கோலா சரஸ்வதி பள்ளியில் பயிலும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 50 பேர், ஒன்றிணைந்து பயிற்சி பட்டறை மூலம் இரண்டு கிலோ எடை கொண்ட சிறிய வகை செயற்கைக்கோளை உருவாக்கினர். பள்ளி வளாகத்தில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த செயற்கைக்கோள் சுமார் மூன்று முதல் 8 மணி நேரம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு தட்பவெட்ப, வாயு அழுத்தம், காற்றின் மாறுபாடு, வளிமண்டல மாறுபாடு போன்ற தரவுகளை பதிவு செய்யும். இவற்றின் மூலம் பள்ளியில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இவை பெரும் உதவியாக இருக்கும் என இந்த செயற்கைக்கோள் உருவாக்க வழி காட்டுதலாக செயல்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் தெரிவித்தார்.