6 மாத சிறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் அப்பீல்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (12:21 IST)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாதம் சிறை தண்டனை பெற்ற சவுக்கு சங்கர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பத்திரிகையாளரான சவுக்கு சங்கர் ஊடகங்களில் பேட்டி அளித்தபோது நீதிமன்றம் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு அதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்
 
இந்த நிலையில் இந்த வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்றிருக்கும் சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் அவரது மேல்முறையீடு வழக்கு இன்னும் ஒரு சில நாட்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
உச்சநீதிமன்றத்தில் அவருடைய சிறை தண்டனை ரத்து செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்