மாணவி சத்யா கொலை: பொதுமக்களுக்கு சிபிசிஐடி முக்கிய அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (20:06 IST)
கல்லூரி மாணவி சத்யாவை சதீஷ் என்பவர் கொலை செய்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்துவரும் சிபிசிஐடி பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளது. 
 
சமீபத்தில் சத்யா என்ற கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி விட்ட கல்லூரி மாணவர் சதீஷ் கொலை செய்தார் என்பதும் அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த வழக்கை ரயில்வே காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இதுகுறித்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கல்லூரி மாணவி சத்யா கொலை தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க விரும்பினால் சிபிசிஐடி அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர்களது பெயர் மற்றும் முகவரியை ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது
 
மேலும் இதுதொடர்பாக மின்னஞ்சலிலும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. சிபிசிஐடி வெளியிட்டுள்ள மின்னஞ்சல் இதோ: 
dspoc2cbcide@tn.gov.in
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்