சாத்தான்குளம் வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல்! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (13:39 IST)
சாத்தான்குளம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு கோரியிருந்த நிலையில் உள்துறை அமைச்சகம் கோரிக்கையை ஏற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க வேண்டுமென தமிழக முதல்வர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை சிபிஐ விசாரிக்க உள்ளதாக மத்திய அரசு தற்போது தெரிவித்திருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்