முன்னதாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதி மூலமாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் மார்க்கெட் மூடப்பட்டது. அதை தொடர்ந்து மதுரை பரவை மார்க்கெட்டிலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டது, மாட்டுத்தாவணி மார்க்கெட்டிலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சேலம் நேதாஜி மார்க்கெட் வியாபாரிகளிடம் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடி விளாத்திக்குளம் மார்க்கெட் வியாபாரிகளுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. விளாத்திக்குளம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 104 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை விளாத்திக்குளம் மார்க்கெட் முழுவதும் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.