ஆகஸ்ட் மாதத்தில் 5 சண்டேஸ்: முழு பொதுமுடக்கத்தால் வேதனை!

சனி, 1 ஆகஸ்ட் 2020 (09:37 IST)
நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா பாதிப்பினால் இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் உள்ள நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு முடிந்த நிலையில் 7 ஆம் கட்ட ஊரடக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அமலுக்கு வந்தது. கடந்த முறை அறிவிக்கப்பட்ட அதே தளர்வுகளும் கட்டுபாடுகளும் தான் இந்த முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா காரணமாக ஜூலை மாதம் முழுவதும் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதேபோல ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமை என்பதால் அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள் மட்டுமே இயங்கும் மீத அனைத்தும் அதாவது காய்கற், மளிகை, கறிக்கடை, டாஸ்மாக் ஆகியவை மூடப்பட்டிருக்கும். 
 
ஆனால் துயரம் என்னெவெனில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 5 ஞாயிற்றுக் கிழமை இருப்பது தான். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்