இந்த மாதம் முழுவதும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டுபாடுகள் என்னென்ன??

சனி, 1 ஆகஸ்ட் 2020 (11:43 IST)
இன்று முதல் 7 ஆம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் இம்மாதம் முழுவதும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டுபாடுகள் மற்றும் தளர்வுகள் பின்வருமாறு... 

 
மாவட்டங்களுக்கு வெளியே பயணிப்பதற்கு எப்போதும் போல இ-பாஸ் வாங்கி ஆக வேண்டும்
 
வணிக வளாகங்கள், திரையரங்குகள், விளையாட்டு திடல்கள் எப்போதும் போல மூடியே இருக்கும்
 
மாஸ்க் அணிவது, கடைகளில் சானிட்டைசர் உபயோகிப்பது ஆகிய செயல்பாடுகளும் தொடரும்
 
இந்த மாத்தில் உள்ள 5 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அமலில் இருக்கும் 
 
பெரிய கோவில்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்கப்படாது 
 
மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள், அரசு பேருந்துகள் அகியவற்றில் பயணம் செய்ய முடியாது 
 
கடைகள், தேநீர் கடைகள் மற்றும் அங்காடிகள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும் 
 
ஹோட்டல்களில் 50% பேர் அமர்ந்து உண்ண அனுமதி உண்டு
 
தொழில்நிறுவனங்கள் 75 சதவீதம் பணியாளர்களோடு இயங்கும்
 
ஆன்லைன் தளங்களில் அத்தியாவசிய மற்றும் அதியாவசியமற்ற பொருட்கள் கிடைக்கும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்