நவகிரகங்களின் கோபப்பார்வையில் சிக்கியிருக்கும் சசிகலா: என்ன சொல்கிறது ஜோதிடம்!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (12:50 IST)
சசிகலா குடும்பத்தை குறிவைத்து 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வருமான வரித்துறை சோதனை.


 
 
இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என தினகரன் தரப்பினர் கூறினாலும்  அவர்களுக்கு ராசி பலன் படி நேரம் சரி இல்லை எனவும், இந்த வருமான வரித்துறை சோதனை மேலும் நீடிக்கும் என கூறப்படுகிறது. ராசி பலன்படி சிறையில் உள்ள சசிகலாவுக்கு இந்த வாரம் மன உளைச்சல் அதிகமாகும் எனவும், வடக்கு, தெற்கு திசைகளில் இருந்து கெட்ட செய்திகள் வரும் என கூறப்படுகிறது.
 
மொத்தத்தில் நவகிரகங்களின் கோபப்பார்வையில் சிக்கியிருப்பதாக இந்த வார அவரது ராசிபலன் கூறுகிறது. செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்தே ஆக வேண்டுமாம். இந்த வாரம் சசிகலா குடும்பத்துக்கு ரெய்டு வாரம் தான் என கூறுகிறது ஜோதிடம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்