பிஎஸ்என்எல் சட்டவிரோத வழக்கில் மாறன் சகோதரர்களை விடுவிக்க கூடாது; சிபிஐ அதிரடி

வெள்ளி, 10 நவம்பர் 2017 (11:23 IST)
பிஎஸ்என்எல் சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்களை விடுவிக்க கூடாது என சிபிஐ தெரிவித்துள்ளது.


 
பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த முறைகேட்டினால் 1 கோடி 78 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியது. மாறன் சகோதரர்கள் இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் விடுவிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்தனர்.
 
இவர்களின் வாதத்தை கேட்ட நீதிபதி இதுகுறித்து சிபிஐ பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சிபிஐ தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
அதில்,
 
இந்த வழக்கில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சட்டப்பட்ட யாரையும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கூடாது என சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவிற்கு 10 நாளில் மாறன் சகோதரர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நவம்பர் 21ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்