சசிகலா புஷ்பா ரகசிய திருமணம்?: பதவியை பெற அசிங்க அரசியல்!

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2016 (08:27 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி.சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் கண்ணீர் மல்க தனக்கு பாதுகாப்பு இல்லை, பெண்கள் பாதுகாப்பு எங்கே, கட்சி தலைமை என்னை பதவி விலக வறுபுறுத்துகிறது, ஜெயலலிதா என்னை அடித்தார் என கூறி அரசியலில் அனுதாபத்தை பெற்றாலும், அவரை பற்றி தொடர்ந்த வரும் செய்திகள் அனைத்தும் அவருக்கு எதிராகவும், முகம் சுழிக்கவும் வைக்கிறது.


 
 
சசிகலா புஷ்பா போயஸ் கார்டனில் தன்னை பற்றி புகார்கள் போக கூடாது என அனைத்து பாதைகளையும் அடைத்தார். மேலும் அங்கு நடக்கும் தகவல்களை தெரிவிக்க அங்கு வேலை பார்த்த பிலால் என்பவரை அவர் திருமணம் செய்ததாகவும் தகவல்கள் வாருகின்றன.
 
சசிகலா புஷ்பா தன்னை திருமணம் செய்ததை அந்த பிலாலே ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. சசிகலா புஷ்பா பிலாலுக்கு அறிமுகம் செய்து வைத்தவரே மணல் வியாபாரம், செய்யும் அந்த முக்கிய புள்ளிதான் என்கிறார் அவர்.
 
எனக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் பழக்கமாகி திருமணம் நடந்தது, பின்னர் மனைவி என்ற முறையில் போயஸ் கார்டனில் நடக்கும் விஷயங்களை சசிகலா புஷ்பாவிடம் கூறுவேன் என்கிறார் பிலால். பின்னர் அதிமுகவில் பதவி வாங்குவதற்காக போலீஸ் உளவுத்துறை அதிகாரியான பாண்டியனுக்கு நெருக்கமான நண்பராக மாறினார் சசிகலா புஷ்பா.
 
சசிகலா புஷ்பா சென்னை வந்தால் பிலாலுடன் தான் தங்குவார். இவர்கள் தங்குவதற்கு இ சி ஆர் ரோட்டில் ஒரு பங்களா வைத்திருக்கிறாராம். தற்போது மழையில் சசிகலா புஷ்பாவும், பிலாலும் குளிக்கும் புகைப்படம், கேக் ஊட்டிவிடும் புகைப்படம் வாட்ஸ் ஆப்பில் வலம் வருகிறது.
 
பின்னர் திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பாவுக்கு பழக்கம் ஏற்பட்டது, பிலாலுக்கு பிடிக்கவில்லை. சசிகலா புஷ்பாவின் தோழி காவ்யா மூலம் சசிகலா புஷ்பா மற்றும் திருச்சி சிவா நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டதே பிலால் தான் என கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்