சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன்ஜாமின்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (11:28 IST)
கணவர் அளித்த புகாரில் தான் கைது செய்யப்படலாம் என நினைத்த சசிகலா புஷ்பா முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி என்பவர் தனது மனைவி மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்தார். இதுகுறித்து சசிகலா புஷ்பா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் சசிகலா புஷ்பா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
15 நாட்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் தலைமறைவாக இருக்க கூடாது என்றும் இரண்டு நிபந்தனைகளை சசிகலா புஷ்பாவுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்