சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்ததையடுத்து, சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் சிறை வாழ்க்கை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறையில் சசிகலாவிற்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. மற்ற கைதிகள் போல்தான் நடத்தப்படுகிறார். அவர் சாதாரண அறையில்தான் படுத்து உறங்குகிறார். அவருடன் அவரின் உறவினர் இளவரசி மட்டும் தங்கியுள்ளார்.
பெங்களூர் சிறையில் பாதுகாப்பு பணிக்கு 3 பெண் கண்காணிப்பாளர்கள் இருக்கிறார்கள். ஏதேனும் பிரச்சனை அவர்களிடம் தெரிவிக்கலாம்.
சசிகலாவிற்கு இங்கு எந்த ஆபத்தும் கிடையாது. அவர் தவறு செய்து விட்டுதான் சிறைக்கு வந்துள்ளார். நாட்டுக்காக போராடி அவர் சிறைக்கு வரவில்லை. எல்லோருக்கும் வழங்கப்படும் பாதுகாப்பே அவருக்கும் வழங்கப்படுகிறது.
அவர் விரும்பினால் வேறு மாநில சிறைக்கு மாற்ற விண்ணப்பம் கொடுக்கலாம். அதை நாங்கள் எதிர்க்கப்போவதில்லை. தற்போது சிறையில் அவர் எந்த வேலையும் செய்யவில்லை. அவர் விருப்பப்பட்டால் அதற்கான பயிற்சி அளிக்கப்படும்” என அவர் கூறினார்.